மனைவியைக் கொன்று தலையைத் துண்டித்து கணவன் - ஈரானில் நடந்த பயங்கரம்

iran wifemurder iranman
By Petchi Avudaiappan Feb 11, 2022 12:17 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஈரானில்  மனைவியைக் கொன்று தலையைத் துண்டித்து கையில் தூக்கிப் பிடித்தபடி போஸ் கொடுத்த கணவனின் புகைப்படத்தைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரான் நாட்டின் ஆவாஸ் என்ற நகரைச் சேர்ந்த மோனா ஹைதரி என்ற 17 வயது பெண்  அவரது கணவர் மற்றும் மைத்துனரால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அதன்பின் தனது மனைவியின் தலையை தூக்கிக் கொண்டு தெருவில் வந்த ஹைதரியின் கணவர் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளான்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி ஈரான் நாட்டையே உலுக்கிய நிலையில் நடந்த சம்பவம் குறித்து அந்த நாட்டின் துணை அதிபர் என்சீ கஸாலி நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது இதுபோன்ற வெறியர்களை ஒடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  காவல்துறை மேலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இதையடுத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து ஹைதரியின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதரிக்கு  12 வயது இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்றும், அவருக்கு தற்போது 3 வயதில் மகன் உள்ளதும் தெரிய வந்தது. 

மேலும் அவரது நடத்தை சரியில்லை என்று கூறி கொலை செய்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். ஈரானில் சமீப காலமாக இதுபோன்ற கெளரவக் கொலைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.