பரபரப்பு: முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு!

Pakistan
By Sumathi Nov 03, 2022 12:51 PM GMT
Report

பாகிஸ்தான் பேரணியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இம்ரான் கான் காயமடைந்துள்ளார்.

பேரணி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில், வரிசாபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

பரபரப்பு: முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு! | Imran Khan Was Injured In Firing

இதில் திடீரென புகுந்த மர்ம நபரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவருடன் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 4 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு

அதனையடுத்து இம்ரான் கான் உடனே மருத்துவமனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.