தவெக விஜய் உடன் கைகோர்க்கும் எடப்பாடி? பிகே போட்ட பிளான்!
தவெக விஜய் உடன் எடப்பாடி கைகோர்க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், கட்சியின் முக்கிய முகங்களான புஸ்ஸி ஆனந்த்,
ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுவெளியில் அதிமுக முன்னாள் அமைச்சர்களோ மாவட்ட செயலாளர்களோ பேசக் கூடாது.
உறுதியான கூட்டணி
விஜய் குறித்து தமிழக வெற்றி கழகம் குறித்தோ எந்த காரணத்தை கொண்டும் பொதுவெளியில் பேசக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாஜகவும் திமுகவும் தான் கொள்கை எதிரிகள் என விஜய் வெளிப்படையாக மாநாட்டிலேயே அறிவித்தார்.
இதற்கிடையில், பிரசாந்த் கிஷோர் ஆய்வு நடத்தி சில அறிவுரைகளை விஜய் தரப்புக்கு வழங்கியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜய்க்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
எனவே, விஜய் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக துணை முதலமைச்சர் பதவி, மூன்றில் ஒரு பங்கு சீட் என விஜய் கேட்கிறார் என்று தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.