பிரபல கால்பந்தாட்ட வீரரை வெளியேற்றிய நாடு - என்ன காரணம்?

Football Israel Turkey Israel-Hamas War
By Sumathi Jan 15, 2024 03:59 PM GMT
Report

இஸ்ரேலிய கால்பந்தாட்ட வீரரை துருக்கி வெளியேற்றியுள்ளது.

சாகிவ் ஜெஹெஸ்கேல்

லீக் விளையாட்டில் துருக்கிய கால்பந்தாட்ட குழுவான ஆண்டலியாஸ்போர் அணி கலந்துக் கொண்டது. அப்போது வீரர் சாகிவ் ஜெஹெஸ்கேல் விளையாட்டின்போது கையில் கச்சை ஒன்றை அணிந்திருந்தார்.

sagiv yehezkel

அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவரது கை மணிக்கட்டில் அணிந்திருந்த கச்சையில் 100 நாள்கள் 10.7 என எழுதப்பட்டிருந்தது. இது அக்.7 ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாள்களாக நடந்துவருவதை குறிப்பதாக கூறப்படுகிறது.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

நீக்கிய துருக்கி 

அதனைத் தொடர்ந்து, வெளிப்படையாக பொதுமக்களிடையே வெறுப்பு மற்றும் விரோதத்தைப் பரப்பும்வகையில் நடந்துகொண்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக துருக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரபல கால்பந்தாட்ட வீரரை வெளியேற்றிய நாடு - என்ன காரணம்? | Turkey Detains Israeli Footballer For Gestures

இதுகுறித்து சாகிவ், நான் போருக்கு ஆதரவாகச் செயல்படவில்லை. 100 நாள்களாகத் தொடரும் போர் நடவடிக்கை இறுதி பெற வேண்டும் என்றே விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆண்டலியாஸ்போர் அணி நிர்வாகம், சாகிவ்-ஐ நீக்கம் செய்ததுடன் அவருடனான ஒப்பந்த முறிவுக்கான நடவடிக்கையையும் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சாகிவ் மீதான தடை, இஸ்ரேலில் கோபத்தை உண்டாக்கியுள்ளதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் நஃப்டாலி பேனட் விமர்சனம் செய்துள்ளார்.