இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?.. சைக்கிளில் வித்த காட்டும் டிடிஎப் வாசன் - வீடியோ வைரல்!
டிடிஎப் வாசன் சைக்கிளில் சுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யூடியூபர் டிடிஎப் வாசன்
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன், பைக் வித்தை காட்டி 2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர். இவர் மீது இருசக்கர வாகனத்தை அச்சுறுத்தும் வகையில் ஓட்டியதாக அடுத்தடுத்து புகார் எழுந்தது. இவர் காஞ்சிபுரம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை நோக்கி பைக் ரைடிங் சென்றார்.
அப்பொழுது முன்னே செல்லும் காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் ஆபத்தான முறையில் வீலிங் செய்துகொண்டே சென்றார், அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்டார்.
வீடியோ
இந்நிலையில், டிடிஎப் வாசன் மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பாதசாரிகள் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில், டிடிஎப் வாசனின் பைக்கை எரிக்க வேண்டும்.
அவரது யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும், ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தார்கள்.
அதன்படி, இவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் புலால் சிறையில் இருந்து வரும் நிலையில், இவரது பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சைக்கிளை ஓட்டி கீழேவந்து வீலிங் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு எண்டே கிடையாது போல என்று விமர்சித்து வருகின்றனர்.