சாலையில் சென்ற முதியவர்.. மாடு முட்டி தூக்கியதில் உயிரிழப்பு - அதிர்ச்சி!
முதியவரை மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளார்.
மாடு முட்டி விபத்து
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே கடந்த 18-ம் தேதி முதியவர் சுந்தரத்தை அவரது பின்னல் வந்த மாடு ஒன்று அவரை முட்டி தூக்கியது. இதில் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது,
உடனே அங்கிருந்தவர்கள் மாட்டை விரட்டிவிட்டு, அந்த முதியவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த மாட்டின் உரிமையாளரை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த முதியவர் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.