கோயில் குருக்கள்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்..
Udhayanidhi stalin
By Petchi Avudaiappan
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கோயில் குருக்களுக்கு பொருட்களுக்கு தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோயில் திருவிழாக்கள், பக்தர்கள் தரிசனம் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் தரிசனம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அத்தொகுதியில் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் அரிசி-பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினார்.