சாலையில் வீலிங் செய்ததில் தூக்கி வீசப்பட்ட டிடிஎப் வாசன் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
சாலையில் பைக் வீலிங் செய்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளார் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன்.
டிடிஎப் வாசன்
கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று அதை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவு செய்து வருகிறார். வாசனுக்கு லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். சினிமா ரசிகர்களை போல் இவருக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அவ்வப்போது பைக்கில் அதிவேகமாக பயணிப்பது, சட்டத்துக்கு முரணாக சாகசம் செய்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வழக்குளிலும் சிக்கி வருகிறார். தற்போது சினிமாவில் களம் இறங்கியுள்ள வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விபத்து
இந்நிலையில் டிடிஎப் வாசன் நேற்று சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வீலிங் (சாகசம்) செய்ய முயன்று நிலைதடுமாறி, அருகில் உள்ள தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது.
https://twitter.com/PrakashMahadev/status/1703432476222423204?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1703432476222423204%7Ctwgr%5E9d6818e61a2c3655cca0364dd6b58ffa90081eba%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fibctamil.com%2Farticles%2F432531
மேலும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விபத்தில் சிக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
https://twitter.com/cinemascopetaml/status/1703466585476968877?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1703466585476968877%7Ctwgr%5E9d6818e61a2c3655cca0364dd6b58ffa90081eba%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fibctamil.com%2Farticles%2F432531