சுனாமி எச்சரிக்கை - ஜப்பானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Tsunami Japan Earthquake
By Karthikraja Jan 14, 2025 03:58 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

தென்மேற்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்குள்ள வீடுகளும் அதற்கு ஏற்றவாறுதான் கட்டப்பட்டுள்ளது. அதனால் சிறிய அளவிலான நில நடுக்கங்களின் போது எந்த பாதிப்பும் ஏற்படாது. 

japan earthquake latest photos

இந்நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 9.19 அளவில் ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 

நெல்லை, தென்காசியில் நில நடுக்கமா? குலுங்கிய வீடுகள்; அலறி ஓடிய மக்கள்

நெல்லை, தென்காசியில் நில நடுக்கமா? குலுங்கிய வீடுகள்; அலறி ஓடிய மக்கள்

சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

japan earthquake photos

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

நிலநடுக்கத்தின் போது வீடுகள் குலுங்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.