ட்ரம்ப் vs கமலா ஹாரிஸ்.. நேருக்கு நேர் விவாதம்- சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்கும், கமலா ஹாரிஸுக்கும் இடையேயான முதல் நேருக்கு நேர் விவாதம் நாளை நடைபெற உள்ளது.
நேருக்கு நேர் விவாதம்
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது .இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் அவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இரு கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இருவரும் வாக்குறுதிகளையும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இரண்டாவது விவாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் ஃபிலெடெல்பியா நகரில் நடைபெற உள்ளது . இந்திய நேரப்படி நாளை (புதன்கிழமை) காலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.
ட்ரம்ப் vs கமலா ஹாரிஸ்
இந்த விவாதத்தில் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதிக்க உள்ளனர். குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வேட்பாளர்கள் மத்தியில் நடக்கும் விவாதங்கள் உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது.
இந்த விவாதங்கள் அமெரிக்காவில் மக்களின் வாக்களிக்கும் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூன்-27ம் தேதி தற்போதைய அமெரிக்கா அதிபரான ஜோ பைடனும், டிரம்பும் நேரடி விவாதம் நடைபெற்றது .அதில், முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.