அடுத்த அமெரிக்க அதிபர் இவர்தான் - 9 தேர்தலை சரியாக கணித்த நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு
அடுத்த அமெரிக்க அதிபர் யார் என தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மேலும் யார் வெற்றி பெறுவார் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
தேர்தல் நாஸ்ட்ரடாமஸ்
இந்நிலையில் அமெரிக்க பல்கலை பேராசிரியரான ஆலன் லிக்மேன் என்பவர், ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து துல்லியமாக கணிப்பதால், ஜனாதிபதி தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என்று அழைக்கப்படுகிறார். 1984ஆம் ஆண்டு, ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கணித்தது முதல், தொடர்ச்சியாக அவர் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்துவருகிறார்.
2000 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ்ஷை, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அல் கோர் தோற்கடிப்பார் என்று அவர் கணித்தது மட்டுமே தவறிப்போனது.
கமலா ஹாரிஸ்
இந்நிலையில் 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கறுப்பின பெண் என்ற பெருமையை பெற்றுள்ள கமலா ஹாரிஸ்,ஆலன் லிக்மேனின் கணிப்பு பலிக்கும் பட்சத்தில், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பட்டத்தை பெறுவார்.
கமலா ஹாரிஸின் தாய் ஷியாமலா கோபலன் சென்னையில் பிறந்தவர். ஷியாமலா கோபலனின் தந்தை பி.வி.கோபாலன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2020 தேர்தல் நேரத்தில் அவர் சென்னை கடற்கரையில் தனது தாத்தா கையை பிடித்து நடந்த நினைவுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டு இருந்தார் கமலா ஹாரிஸ்.