டிரம்பிற்கு மாத மாதம் 376 கோடி வழங்கும் எலான் மஸ்க் - என்ன காரணம் தெரியுமா?
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மாத மாதம் 376 கோடி வழங்கும் எலான் மஸ்க் முன் வந்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் பிரச்சாரங்களுக்கு அதிக செலவாகும் என்பதால் அவர்கள் பிரச்சாரத்துக்காக பெருமளவு நிதி திரட்டுவார்கள். சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எலான் மஸ்க்
இந்த தாக்குதலின் போது உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது டொனால்டு டிரம்பிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் PAC என்னும் நிறுவனத்துக்கு மாத மாதம் 376 கோடி வழங்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் எலான் மஸ்க் பல முறை எக்ஸ் பக்கத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடனை பல முறை விமர்சித்துள்ளார்.