டிரம்ப்பை சுட்ட 20 வயது இளைஞர் யார் - வெளியான பரபரப்பு தகவல்
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சுட்டது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார்.
அருகில் இருந்த இதன்பின் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் கூட்டத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விசாரணை
இந்த தாக்குதலை நடத்தியவரை அங்கிருந்த டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். தற்போது அவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அவர் பெனிசுலாவை சேர்ந்த தாமஸ் மாத்தியூ
க்ரூக் என்ற 20 வயது இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் என்ன காரணத்திற்க்காக துப்பாக்கி சூடு நடத்தினர் இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து FBI விசாரணை வருகிறது.