தேர்தல் பேரணியில் சுடப்பட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்!! அதிர்ந்த அமெரிக்கா
அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
சுடப்பட்டார் டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த தேர்தல் பேரணியின் போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்தார். சம்பவத்திற்குப் பிறகு அவரது பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் முகத்தில் இரத்தத்துடன் மேடைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்புடன் மேடைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்ட அவரது முகத்தில் ரத்தம் இருந்தது. ஒரு அறிக்கையில், டிரம்பின் செய்தித் தொடர்பாளர் அவர் "நன்றாக இருக்கிறார்" என்றும் உள்ளூர் மருத்துவமனையில் "பரிசோதிக்கப்படுகிறார்" என்றும் கூறினார். டிரம்பின் truth சமூக வலைதளபக்கத்தில் "என்னுடைய வலது காதின் மேல் பகுதியில் நான் சுடப்பட்டேன்.
கண்டனம்
அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது, அதனால் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன்" என்று பதிவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது குடியரசுக் கட்சியின் போட்டியாளர் டிரம்ப் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார். "இந்த வகையான வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை. என்று அவர் கூறினார்.
இந்த விஷயம் குறித்து தனக்கு முழுமையாக விளக்கப்பட்டுள்ளதாகவும், டிரம்புடன் பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்த பைடன் இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரும், பேரணியில் பங்கேற்றவர்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க ரகசிய சேவை,(US Secret Service) ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation) போன்ற அமைப்புகள் இந்தச் சம்பவத்தை ஒரு படுகொலை முயற்சி என்று விசாரித்து வருகின்றன.