நேரடி விவாதத்தில் கெத்து காட்டிய ட்ரம்ப் - திணறிய பைடனை மாற்றும் முடிவில் கட்சி
அமெரிக்கா நாட்டு அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.
தேர்தல்
அமெரிக்கா நாட்டு தேர்தல் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் பதவியேற்கும் அதிபரை வைத்தே உலகத்தின் அரசியல் களம் அமையும். அதன் காரணமாக, அந்நாட்டில் அதிபர் தேர்தல் வந்தாலும், அனைத்து நாட்டிலும் பெறும் எதிர்பார்ப்புகள் உண்டாக்கிவிடும்.
இந்த நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுகிறார் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபரான ட்ரம்ப். அவரை எதிர்த்து மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனே போட்டியிடுகிறார்.
மாற்றம்
நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் சூழலில், இருவரும் இடையில் நேரடி விவாதம் நடைபெற்றது. CNN நிறுவனம் ஒருங்கிணைத்த இந்த காரசார விவாதத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக தனிப்பட்ட முறையில் கூட சாடி பேசினார்கள்.
அமெரிக்க நாட்டின் பொருளாதார நிலை சீர்குலைவு, உக்ரைன் - ரஷ்யா போர், வெளியுறவுக் கொள்கை, காசா போர் போன்றவற்றை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்க முடியாமல் திணறியது வெளிப்படையாக தெரிந்தது.
அதனை தொடர்ந்து தான் அதிருப்தியடைந்துள்ள கட்சியின் நிர்வாகிகள் ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றும் முடிவில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது