ரூ.640 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு..! அப்படி என்ன டிரம்ப் செய்தார் தெரியுமா..?
இந்தாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் பதவிக்கு போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் அவதூறு வழக்கு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார்.
கடந்த 1996-ஆம் ஆண்டு நியூயார்க்கின் வணிக வளாகம் ஒன்றில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் அப்போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் குற்றம்சாட்டினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், சமூகவலைத்தளங்களில் ஜீன் கரோல் குறித்து, அவதூறாக கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம்சாட்டி மானநஷ்ட வழக்கை ஜீன் கரோல் தொடுத்தார்.
ரூ. 640 கோடி
அப்போது தனக்கு 10 மில்லியன் டாலர் நஷ்டஈடு வேண்டும் என்றும் ஜீன் கரோல் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கில் தான், இன்று நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதில், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டிரம்ப் 83.3 மில்லியன் டாலர் அதாவது ரூ.640 கோடி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டடுள்ளனர். இது ஜீன் கரோல் கோரியத்தை விட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.