அமெரிக்கா தேர்தலில் வரலாறு படைக்கும் கமலா ஹாரிஸ் - முன்னரே மன்னார்குடி கோவில் கல்வெட்டில் பதிவு
அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளராகியுள்ளார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸ்
நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் பைடன் பின்வாங்கியதை தொடர்ந்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அவர், குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்பை எதிர்கொள்கிறார்.
தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறலாம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் தான் கமலா ஹாரிஸ் தாயார் ஷியாமலா கோபலனின் பூர்வீகம்.
கல்வெட்டு
வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் மேற்கொண்டனர்.
தங்களது குலதெய்வ கோயிலான துளசேந்திரபுரத்தில் அமைந்துள்ள தர்ம சாஸ்தா கோயிலுக்கு கமலா ஹரிஸ் பல ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார்.
அந்த விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.