கடவுளே..கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் - சொந்த ஊர் மக்களின் அன்பை பாருங்க!
கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரின் சொந்த
ஊர் மக்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர் .
கமலா ஹாரிஸ்
அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வேட்பாளராக கமிறங்கியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலம் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில்,அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரின் சொந்த ஊர் மக்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பெற்றோர் விவகாரத்து பின் தன்னுடைய 7 இருந்து தாய் உடன் வசிக்கத் தொடங்கினார். இரண்டு பெண்களை ஷியாம கோபலன் தனியாகவே வளர்த்தார்.
ஊர் மக்கள்
இதனால் கமலா ஹாரிஸ் அப்போது பல்வேறு பள்ளிகளில் படிக்க வேண்டி இருந்தது. அவர் தனது இளங்கலைப் பட்டப்படிப்புக்காக ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது படிப்பை முடித்தார்.
கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் தனது சிறு வயதில் சென்னைக்கு வந்து சில நாட்கள் தனது தாத்தா- பாட்டியுடன் தங்கியுள்ளார் கமலா ஹாரிஸ் . அதே போல் கடந்த 2020 தேர்தல் சமயத்திலேயே அவர் சென்னை கடற்கரையில் தனது தாத்தா கையை பிடித்து நடந்த நினைவுகள் பகிர்ந்து இருந்தார்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர் .