கமலா ஹாரிஸ் அதிபரானால்..டெய்லர் ஸ்விப்ட் தான் துணை அதிபர்? வெளியான உண்மை!

United States of America Kamala Harris Election World Taylor Swift
By Swetha Jul 22, 2024 10:40 AM GMT
Report

கமலா ஹாரிஸ் அதிபரானால்..டெய்லர் ஸ்விப்ட் தான் துணை அதிபர் என்ற தகவல் பரவி வருகிறது.

துணை அதிபர்?

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.அதேபோல ஜனநாயக கட்சி வேட்பாளராக பைடன் களம் இறங்கினார்.

கமலா ஹாரிஸ் அதிபரானால்..டெய்லர் ஸ்விப்ட் தான் துணை அதிபர்? வெளியான உண்மை! | Will Taylor Swift Be Vice President If Kamala Wins

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல் போன்ற சர்ச்சைகள் எழுந்த நிலையில், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த பைடன், அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். அமெரிக்காவில் பிரபல பாடகி மற்றும் பாடல் ஆசிரியராக டெய்லர் ஸ்விப்ட்(34) இருந்து வருகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது, பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு ஸ்விப்ட் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார். எனினும் இம்முறை அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த சூழலில், ஸ்விப்டின் ரசிகர்கள் எக்ஸ் சமூக ஊடகத்தில் சில செய்திகளை பரப்பியுள்ளனர்.

அதிபர் தேர்தலிலிருந்து விலகிய ஜோ பைடன் - தமிழ்நாட்டு பூர்விகம் கொண்ட புதிய வேட்பாளர்?

அதிபர் தேர்தலிலிருந்து விலகிய ஜோ பைடன் - தமிழ்நாட்டு பூர்விகம் கொண்ட புதிய வேட்பாளர்?

டெய்லர் ஸ்விப்ட்

அதில், வருகின்ற தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க உதவுவதற்காக ஸ்விப்டின் ரசிகர்கள் தயாராக உள்ளனர். இதற்காக ஸ்விப்டின் கூட்டணியும் ரசிகர்களை இயக்க தயாராக உள்ளது. 

கமலா ஹாரிஸ் அதிபரானால்..டெய்லர் ஸ்விப்ட் தான் துணை அதிபர்? வெளியான உண்மை! | Will Taylor Swift Be Vice President If Kamala Wins

அதுமட்டுமின்றி, காலியாக உள்ள துணை அதிபர் பதவிக்கு, 2020-ம் ஆண்டில் தனக்கு ஆதரவு தெரிவித்த ஸ்விப்டை கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுப்பார் என்றும் ஒரு தகவல் பரவியது. ஆனால், இதன் உண்மை தன்மை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஸ்விப்டும் இதுபற்றி எதுவும் கூறவில்லை. மேலும், வடக்கு கரோலினா மாகாண கவர்னராக ராய் கூப்பர் உள்ளார். அதிபர் தேர்தலில் ஹாரிஸ் வெற்றி பெற்றால், துணை அதிபருக்கான கமலா ஹாரிசின் தேர்வாக கூப்பர் இருப்பார் எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.