போப்பாக மாறிய டிரம்ப் - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
டிரம்ப் பதிவிட்டுள்ள புதிய ஏ.ஐ. படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போப்பாக டிரம்ப்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் ரோமில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் மாநாடு தொடங்கவுள்ளது. உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் உள்ளனர்.
புகைப்படத்தால் சர்ச்சை
அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள். இதற்கிடையில் "நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் போப் ஆண்டவர் போல் உள்ள ஏ.ஐ. புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போப் ஆண்டவரையும், புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.