'இடியட்' என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? கூகுள் சுந்தர் பிச்சை விளக்கம்
இடியட் எனத் தேடினால் டொனால்ட் டிரம்ப்-ன் என புகைப்படங்கள் வந்தது பேசுபொருளானது.
இடியட்
கூகுளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடியட் எனத் தேடினால் டொனால்ட் டிரம்ப்-ன் என புகைப்படங்கள் வந்தது உலக அளவில் பேசுபொருளானது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க காங்கிரஸின் நீதித்துறை குழுவில் நடைபெற்ற விசாரணையின் போது, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
சுந்தர் பிச்சை விளக்கம்
அதில், "கூகுள் எந்த தேடல் முடிவுகளையும் கைமுறையாக ( மேனுவலாக) உருவாக்கவில்லை அல்லது மாற்றவில்லை. இணையத்தில் மக்கள் என்ன பதிவிடுகிறார்கள், எந்த புகைப்படங்களுடன் எந்த வார்த்தைகளை இணைக்கிறார்கள் என்பதையே எங்கள் அல்காரிதம் பதிவு செய்கிறது.
பல பயனர்கள் 'Idiot' என்ற சொல்லை ட்ரம்ப் புகைப்படத்துடன் இணைத்ததால், அதுவே தேடல் முடிவில் முதன்மையாக தோன்றியது" கூகுள் சொந்தமாக எந்த கருத்தையும் உருவாக்குவதில்லை.
கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தேடுதல்கள் நடந்துள்ளது. அவற்றையெல்லாம் எந்த மனிதராலும் தேடி முடிவுகளை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.