விமான சக்கரத்தில் அமர்ந்து பறந்து வந்த சிறுவன் - 2 மணி நேர திக்திக் பயணம்!

Delhi Afghanistan Flight
By Sumathi Sep 23, 2025 10:23 AM GMT
Report

விமானம் ஒன்றின் சக்கரத்தில் அமர்ந்து சிறுவன் ஒருவன் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சக்கரத்தில் சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கேஏஎம் விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லி புறப்பட்டது.

afghan boy

விமானம் டெல்லியில் தரையிறங்கிய பின்னர் அந்த விமானம் அருகே சந்தேகத்திற்கிடமாக சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்துள்ளான்.

மனைவி திருநங்கையா? ஆதாரம் வெளியிடத் தயாராகும் அதிபர் - என்ன நடந்தது!

மனைவி திருநங்கையா? ஆதாரம் வெளியிடத் தயாராகும் அதிபர் - என்ன நடந்தது!

திக்திக் பயணம்

அவனை பாதுகாப்புப் படையினர் பிடித்துச் சென்று விசாரித்தபோது, சிறுவன் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது.

விமான சக்கரத்தில் அமர்ந்து பறந்து வந்த சிறுவன் - 2 மணி நேர திக்திக் பயணம்! | Afghan Boy Hides In Planes Landing Gear Shock

காபூல் விமான நிலையத்தில் நுழைந்த சிறுவன் விளையாட்டாக விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் உள்ள பகுதிக்குள் நுழைந்தபோது விமானம் புறப்பட்டு விட்டதாக கூறியுள்ளான்.

இதனையடுத்து விமானத்தை சோதித்த அதிகாரிகள் எந்த சதிசெயலும் இல்லை என உறுதிப்படுத்திய பின்னர் சிறுவனை மீண்டும் விமானத்தில் காபூலுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.