எனக்கு 7 நோபல் பரிசு கொடுத்திருக்கணும்; அதுமட்டும் தான் பாக்கி - புலம்பிய டிரம்ப்
7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருந்து நிகழ்வில் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், “உலக அரங்கில் நாம் செய்துவரும் சில செயல்களால், நாம் இதற்கு முன்னர் இல்லாத அளவிலான மரியாதையை இப்போது பெற்று வருகிறோம்.
நாம் உலக நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறோம். போர்களை நிறுத்தி வருகிறோம். நாம் இந்தியா - பாகிஸ்தான், தாய்லாந்து - கம்போடியா உள்பட 7 போர்களை நிறுத்தியுள்ளோம்.
அதிலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நான் எப்படி நிறுத்தினேன் தெரியுமா? வர்த்தகத்தை சுட்டிக் காட்டி நிறுத்தினேன். இந்தியா - பாகிஸ்தான், தாய்லாந்து - கமோடியா, அர்மேனியா - அஜர்பைஜான், கொசோவா - செர்பியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எதியோபியா,
டிரம்ப் ஆதங்கம்
ருவாண்டா - காங்கோ என 7 போர்களை நிறுத்தியுள்ளேன். இவற்றில் 60% போர்கள் வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்தே நிறுத்தப்பட்டன. இப்போது, நான் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தினால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்றார்கள்.
அவர்களிடம், “அதான் 7 போர்களை நிறுத்திவிட்டேனே!. ஒவ்வொரு போர் நிறுத்தத்துக்குமே ஒரு தனி நோபல் பரிசு தர வேண்டும், என்றேன்.”. ஆனால், அவர்களோ, “ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தினால் கிடைக்கலாம்.” என்கிறார்கள். அது ஒரே ஒரு போர் தான்.
ஆனால் மிகப்பெரிய போர். ஆரம்பத்தில், புதின் என்னுடன் நல்ல உறவில் இருப்பதால், ரஷ்யா - உக்ரைன் போரை சீக்கிரமாகவே முடிக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் என் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார். இருப்பினும், ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்துவோம்.” என கூறியுள்ளார்.