முதலையின் வாயில் முத்தமிட்டு, மசாஜ் செய்த இளைஞர் - வைரலாகும் வீடியோ!
இளைஞர் ஒருவர் முதலைக்கு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
முதலையுடன் இளைஞர்
அமெரிக்கா, லூசியானா மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் படகில் செல்லும்போது, கருப்பு நிற பெரிய முதலையை காண்கிறார்.
அது அவரை நோக்கி அருகே சென்றதும், அதன் வாய் பகுதியில் அந்த இளைஞர் முத்தமிடுகிறார். பின் அதற்கு சாப்பிட வெள்ளை நிற இனிப்பு கட்டிகளை கொடுக்கிறார்.
வைரல் வீடியோ
அதனை சாப்பிட்டதும் அது அமைதியாகி விடுகிறது. தொடர்ந்து வாய் பகுதியை பிடித்தும், கால் மற்றும் வால் பகுதியை பிடித்தும் விடுகிறார்.
இதனால் அது எதுவும் செய்யாமல் இருக்கிறது. இதுகுறித்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதனை 2.28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் இதனை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.