மருந்துகளுக்கு 100% வரி; குண்டை போட்ட டிரம்ப் - மத்திய அரசு சொல்வதென்ன..?
மருந்துப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் வரி
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற மற்றும் பிராண்டட் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே தங்கள் ஆலைகளை அமைத்தால், அல்லது அதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருந்தால், அவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மத்திய அரசு விளக்கம்
இந்த வரிவிதிப்பு வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். மருந்துப் பொருட்களைத் தவிர, அமெரிக்கா அக்டோபர் 1 முதல் கனரக லாரிகள், மெத்தை தளபாடங்கள், சமையலறை அலமாரிகள் மற்றும் குளியலறை வேனிட்டிகள் ஆகியவற்றிற்கும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மருந்து பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 100 சதவீதம் வரி விதித்த விவகாரத்தில் சூழ்நிலைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும் டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் மருந்து கம்பெனிகளுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.