ஜிஎஸ்டி 2.0; ஐஸ்கிரீம் முதல் ஆயில் வரை - விலை குறைவு பட்டியல் இதோ..

Smt Nirmala Sitharaman India GST
By Sumathi Sep 23, 2025 10:10 AM GMT
Report

ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 2.0 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய ஜிஎஸ்டி விதிகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இந்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தம் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது.

gst 2.0

இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு வகையாக வரிகள் இருந்து வந்தன. இனி ஜி.எஸ்.டியில் 5 சதவிகிதம், 18 சதவிகிதம் என இரண்டு வகையான வரிகள் மட்டுமே இருக்கப்போகின்றன.

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 - முதல்வர் அறிவிப்பு!

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 - முதல்வர் அறிவிப்பு!

  • ஹேர் ஆயில்
  • ஷாம்பு
  • பற்பசை
  • டாய்லெட் சோப்
  • பார் டூத் பிரஷ்
  • ஷேவிங் கிரீம்

ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி 18% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

  • வெண்ணெய்
  • நெய்
  • பாலாடைக்கட்டி
  • டெய்ரி ஸ்ப்ரெட் பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் புஜியா மிக்சர் போன்ற நொறுக்குத் தீனிகள்

ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 கிட்டத்தட்ட 500 பொருட்களின் விலை குறைந்துள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

  • பிஸ்கெட்
  • வெண்ணெய்&நெய்
  • நூடுல்ஸ் பாஸ்தா
  • கார்பனேற்றம் செய்யப்படாத ஜூஸ்
  • குழந்தைகள் டயாப்பர்
  • தக்காளி சாஸ் மயோனைஸ் ஜாம்ஸ் & ஸ்பிரெட்ஸ் சாசேஜஸ்

ஆகிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

  •  காபி பவுடர்
  • ஹெல்த் டிரிங்க்
  • கார்ன் பிளேக்ஸ் ஓட்ஸ்
  • சாக்லேட்
  • ஐஸ்க்ரீம்
  • ஹெல்த் கேர் (விக்ஸ், அமுர்தாஞ்சன், ஏக்ஸ் போன்றவை) ஷேவிங் கேர் (ஷேவிங் பிளேடு, க்ரீம், லோஷன் போன்றவை)

ஆகிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 5% ஆக குறைந்துள்ளது.

நோட்டு புத்தகம் பென்சில் ஆயில் பேஸ்டல்ஸ் ஷார்ப்னர் கிரயான்ஸ் பன்னீர் யுஹெச்டி பால் சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.