பக்கா ஜென்டில் மேன்.. அவரை மாதிரிதான் கணவர் வேண்டும் - போட்டுடைத்த த்ரிஷா!

Ajith Kumar Trisha
By Sumathi Nov 20, 2023 05:30 PM GMT
Report

வருங்கால கணவர் குறித்து த்ரிஷா கூறிய தகவல் கவனம் பெற்றுள்ளது.

த்ரிஷா 

தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார்.

actress trisha

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முந்தைய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசியுள்ள த்ரிஷா, நான் எனக்கான நபரை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

18 வயசிலேயே தெரியும்; ராணா அப்படித்தான் - முன்னாள் காதலன் குறித்து மனம் திறந்த த்ரிஷா!

18 வயசிலேயே தெரியும்; ராணா அப்படித்தான் - முன்னாள் காதலன் குறித்து மனம் திறந்த த்ரிஷா!

ஜென்டில் மேன்

அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பக்கா ஜென்டில் மேன். அவர் எனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்பார். அப்படி கேட்பவரை, யாருக்குத்தான் பிடிக்காது. நானும் அவரும் நிறைய பேசி இருக்கிறோம். அதில் சினிமா சார்ந்த விஷயங்கள் கூட இல்லை.

trisha about ajith

அவர் பலதரப்பட்ட விஷயங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நல்ல கணவரும், அப்பாவுமாக இருக்கிறார். அவரை போன்ற நபரை எந்த பெண்ணும் கணவனாக பெற வேண்டும் என்று விரும்புவாள்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.  

You May Like This Video