Monday, Apr 28, 2025

18 வயசிலேயே தெரியும்; ராணா அப்படித்தான் - முன்னாள் காதலன் குறித்து மனம் திறந்த த்ரிஷா!

Trisha Rana Daggubati
By Sumathi 2 years ago
Report

ராணா குறித்து த்ரிஷா முன்னதாக பகிர்ந்த தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

18 வயசிலேயே தெரியும்; ராணா அப்படித்தான் - முன்னாள் காதலன் குறித்து மனம் திறந்த த்ரிஷா! | Trisha Talks About His Ex Lover Rana Viral

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

ராணாவுடன் காதல்?

இதற்கிடையில் த்ரிஷா தயாரிப்பாளர் வருண் என்பவரை காதலித்து, நிச்சயதார்த்தம் நிகழ்ந்து கருத்து வேறுபாட்டால் திருமணம் நின்றது. அதன்பின், நடிகர் ராணாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

18 வயசிலேயே தெரியும்; ராணா அப்படித்தான் - முன்னாள் காதலன் குறித்து மனம் திறந்த த்ரிஷா! | Trisha Talks About His Ex Lover Rana Viral

ஆனால் அந்த உறவும் சாதகமாக அமையவில்லை. இந்நிலையில், முன்னதாக த்ரிஷா ராணா பற்றி பேசிய தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. “ராணா மிகவும் நல்ல மனிதர். மிகவும் நன்றாக நடந்து கொண்டார். அவரிடம் பல நல்ல குணங்கள் உள்ளன.

எனக்கு அவர மாதிரிதான் கணவர் வேணும் - பளீச்னு சொன்ன த்ரிஷா!

எனக்கு அவர மாதிரிதான் கணவர் வேணும் - பளீச்னு சொன்ன த்ரிஷா!

மக்களை மதிப்பார். அவர் ஒரு ஜென்டில்மேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ராணாவை எனக்கு 18 வயதிலிருந்தே தெரியும். நாங்கள் அண்டை வீட்டாராக இருந்தோம். ராணா சென்னையில் வளர்ந்தவர். நட்பு கொண்டார். ராமாநாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ராணாவிடம் அதன் ஈகோ எதுவும் இல்லை. சாதாரணமாகவே நடந்துக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.