எனக்கு அவர மாதிரிதான் கணவர் வேணும் - பளீச்னு சொன்ன த்ரிஷா!

Trisha
By Sumathi Oct 07, 2023 07:37 AM GMT
Report

அஜித்தை போன்ற நபரை எந்த பெண்ணும் கணவனாக பெற விரும்புவாள் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா

தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

எனக்கு அவர மாதிரிதான் கணவர் வேணும் - பளீச்னு சொன்ன த்ரிஷா! | Trisha Want To Marry A Man Like Ajith Kumar

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருமணம்? 

இந்நிலையில், திருமணம் குறித்து பேசியுள்ள த்ரிஷா, எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை. நான் கல்யாணம் செய்து கொண்டு, அதை நோக்கி செல்வதற்கும் விருப்பம் இல்லை. எனக்கு தெரிந்த பல நண்பர்கள் அவர்களது மணவாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன.

எனக்கு அவர மாதிரிதான் கணவர் வேணும் - பளீச்னு சொன்ன த்ரிஷா! | Trisha Want To Marry A Man Like Ajith Kumar

என்னுடைய வாழ்க்கையும் அப்படி ஆகி விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். நான் எனக்கான நபரை தேடிக்கொண்டு இருக்கிறேன். அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பக்கா ஜென்டில் மேன். அவர் எனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்பார். அப்படி கேட்பவரை, யாருக்குத்தான் பிடிக்காது.

த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கு காரணமே அவங்கதான் - உண்மை உடைத்த பிரபலம்!

த்ரிஷா - ராணா காதல் முறிவுக்கு காரணமே அவங்கதான் - உண்மை உடைத்த பிரபலம்!

நானும் அவரும் நிறைய பேசி இருக்கிறோம். அதில் சினிமா சார்ந்த விஷயங்கள் கூட இல்லை. அவர் பலதரப்பட்ட விஷயங்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நல்ல கணவரும், அப்பாவுமாக இருக்கிறார். அவரை போன்ற நபரை எந்த பெண்ணும் கணவனாக பெற வேண்டும் என்று விரும்புவாள்” எனத் தெரிவித்துள்ளார்.