10 வருஷம்.. நான் ரெடி; செல்வராகவனுக்கு ஓகே சொன்ன த்ரிஷா - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
முன்பு இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட்டுக்கு த்ரிஷா பதிலளித்துள்ளார்.
நடிகை த்ரிஷா
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’. இதில், நடிகர் வெங்கடேஷ், நடிகை த்ரிஷா நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் மெகா ஹிட் அடித்த நிலையில், தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் நடிகர்கள் தனுஷ், நயன்தாரா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அதுவும் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
யாரடி நீ மோகினி
இதற்கிடையில், 2013ல் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட நாட்களுக்கு பின்னர் ’ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.
இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா, ’நான் ரெடி’ என பதிலளித்துள்ளார். இந்தப் பதிவுதான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.