அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இருந்ததே இல்ல - மனம்திறந்த த்ரிஷா!
விஜய்யுடனான உறவு குறித்து நடிகை த்ரிஷா பேசியுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல இதர மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஜயுடன் நட்பு
நடிகர் விஜயுடன் அதிக படங்களில் நடித்த நடிகை திரிஷா அவ்வப்போது அவருடன் கிசுகிசுக்கப்படுவார். இந்நிலையில் த்ரிஷா அளித்த பேட்டி ஒன்றில் விஜய் குறித்த கேள்விக்கு, நானும் விஜய்யும் இதுவரை பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம்.
ஆனால் கில்லி படத்துக்கு முன் நாங்கள் அப்படி இல்லை.
அனைவரும் சொல்வது போல, விஜய் மிகவும் அமைதியான ஒரு நபர். கில்லி படத்துக்கு பின்புதான் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம் எனத் தெரிவித்துள்ளார்.