இந்த நடிகையால் தான் த்ரிஷா இன்னும் திருமணம் செஞ்சுக்கல - தீயாய் பரவும் தகவல்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
த்ரிஷா திருமணம் செய்யாதது குறித்த தகவல் ஒன்று உலாவி வருகிறது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல இதர மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இதனால் அவ்வபோது கிசுகிசுக்களில் சிக்குவார்.
திருமணம்?
40 வயதாகும் திரிஷாவுக்கு ஏற்கனவே வருண் என்பவருடன் நிச்சயம் நடத்தப்பட்டது. ஆனால் அது திருமணம்வரை செல்லவில்லை. அதேபோல் ராணா டகுபதியுடனான காதலும் சில காரணங்களால் பாதியில் முறிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நயன் தாரா இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டு நடித்துவந்தாலும் முன்னர் போல் பிஸியாக இல்லை. ஒரு சில படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார்.
ஆனால் திரிஷாவோ ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். எனவே இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வாங்கும்வரை கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.