கடனுக்காக துணை நடிகரின் மனைவி கடத்தல் - 2 மாதம் தனியறையில் அடைத்து கொடுமை!
பெண் ஒருவர் 6 மாத காலமாக தனியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கடத்தல்
திருச்சி மாவட்டம் அரியமங்கலம், விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் சினிமா துணை நடிகரான மதியழகன் (55). இவருக்கு மாலதி (46) என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் உமாராணி என்பரிடம் கந்துவட்டிக்கு ரூ.6 லட்சம் பணத்தை வாங்கியுள்ளார் மாலதி. கடனை திருப்பி தராதாதால் ஆத்திரமடைந்த உமாராணி, மாலதியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் மீட்பு
மேலும், கடந்த 2 மாதங்களாக மாலதியை தனியறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறியாத மதியழகன் தனது உறவினர்களுடன் மாலதியை தேடிவந்துள்ளார்.
சில நாட்களுக்கு பிறகுதான் அவர் உமாராணியால் கடத்தப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் உமாராணியின் வீட்டிற்கு விரைந்தனர்.
பின்னர் அங்கு தனியறையில் அடைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர். இதனையடுத்து உமாராணியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.