பெட்டிக்கடை நடத்தும் நடிகர் - பணம் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளர்
சென்னை செம்பியம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் சினிமா துணை நடிகரிடம் காவல் ஆய்வாளர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
துணை நடிகர் திருநாவுக்கரசு
தமிழ் சினிமாவில், துணை நடிகராக நடித்து வந்தவர் நடிகர் திருநாவுக்கரசு. பல்வேறு படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ள இவர் சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் தற்போது பெட்டிக்கடை நடத்தி வருகின்றார்.
சினிமாவில் நடித்து வந்த அவருக்கு திடீரென கால் முறிவு ஏற்படாததால் சினிமா வாய்ப்பு திருநாவுக்கரசுக்கு குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது அவர் நடிப்பதை குறைத்து விட்டு, முழு நேரமாக தனது கடையில் இருந்து வருகின்றார்.
நேரில் வந்து மிரட்டிய ஆய்வாளர்
செம்பியம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த கடையில், அவரிடம் பணம் கேட்டு செம்பியம் காவல் ஆய்வாளர் அய்யப்பன் மிரட்டி இருக்கிறார். ஆனால் அதற்கு, திருநாவுக்கரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில், அவரை நேரில் வந்து சந்திக்கும் படி அய்யப்பன் தகவல் கொடுத்துள்ளார்.

அதற்கும், திருநாவுக்கரசு பதிலளிக்காத நிலையில், காவல் ஆய்வாளரான அய்யப்பன் திருநாவுக்கரசு நடத்தும் கடைக்கு நேரே வந்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil