தொடரும் ஆபாச பதிவுகள்..நானும் எனது மனைவியும் விலக முடிவு - திருச்சி எஸ்பி திடீர் முடிவு!
திருச்சி எஸ்பி வருண்குமார் மனைவியுடன் ட்வீட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆபாச கருத்து
திருச்சி மாவட்ட எஸ்பியான வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துகளை பரப்பி வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த அவதூறு கருத்துகள் தொடர்பாக சீமான் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி எஸ்பி வருண்குமார் மனைவியுடன் ட்வீட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து எஸ்பி வருண்குமார் வெளியிட்டுள்ள x பதிவில் ,'' பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற தொடர் ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. என்னதான் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்தாலும் நாங்களும் சராசரி மனிதர்கள்தான்.
ஒரு சாதாரண தகப்பன் மற்றும் தாயாக இது எங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் ஒரு அளவிற்கு பாதித்துள்ளது. ஒரு சராசரி குடும்ப நபராக எங்கள் மூன்று குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மீதான அக்கறைக்காக இந்த X இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவி அவர்களும் விலக முடிவு செய்துள்ளோம்.
திருச்சி எஸ்பி
எங்களது இந்த முடிவு தற்காலிகமானது என்றபோதும் நாங்கள் இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ மேற்கொள்ளவில்லை.போலிக் கணக்குகள் மூலம் பெண்களை ஆபாசமாகச் சித்தரிக்கும் (Morphing) குழந்தைகளுக்குக் கொலை மிரட்டல் விடும் வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்கு அவமானப்பட வேண்டும்.
…continuation. Thanks to the support of all senior officers, colleagues, friends & well wishers. pic.twitter.com/rZCrLz9UxY
— Dr.Varun Kumar IPS (@VarunKumarIPSTN) August 24, 2024
அதேநேரத்தில், ஒரு சாதாரண குடிமகனாக இணையத்தில் எழுந்துள்ள இதுபோன்ற கூலிப்படை தாக்குதலைக் கண்டு மிகவும் அக்கறையும்,அறச்சீற்றமும் கொள்கிறேன்.ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ள பெண்ணையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும்,பெண்களையும் என்ன செய்வார்கள்?..
இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை,மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.