கோயில் தேர் திருவிழாவில் தகராறு : போலீஸ் தடியடியால் பரபரப்பு

trichy policestation
By Irumporai Apr 04, 2022 08:36 AM GMT
Report

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 15ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது

மதுரைகாளியம்மன், ஓலை பிடாரியம்மன் ஆகிய இரு தெய்வங்களும் தனித்தனியே சுமார் 40 அடி உயரமுள்ள 2 தேர்களில் எழுந்தருளுவர். அப்போது பக்தர்கள் திருத்தேரை தோளிலும், தலையிலும் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. நேற்று ஒரு பிரிவினர் பூத்தட்டு எடுத்துச் சென்றபோது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். அப்போது இரு தரப்பைச் சேர்ந்த வாலிபர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினர் திருச்சி நாமக்கல் சாலையில் கார்த்தியை பட்டி என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு சுமார் 11மணியளவில் துவங்கிய சாலை மறியல் போராட்டம் 2 மணி வரை நீடித்தது

கோயில் தேர் திருவிழாவில் தகராறு :  போலீஸ் தடியடியால் பரபரப்பு | Temple Chariot Festival Stirring By Police Baton

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி எஸ் பி சுஜித் குமார்மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் பிடிவாதமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தயாராக நிறுத்தியிருந்த வஜ்ரா வாகனத்தின் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்

.அப்போது போலிசார் லத்தியால் அடித்து பொதுமக்களை விரட்டி அடித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது திருத்தேர் இரண்டும் வணபட்டரை மைதானத்தில் உள்ளது. இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.