அமைதியாக இருந்த விஜி .. சீண்டிய சீமான் - அடுத்து வெளியிட்ட வீடியோ
தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமியை தூண்டிவிட்டது திமுக என சீமான் பேசிய நிலையில், விஜயலட்சுமி ஆவேசமாக பேசி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அரசு மின் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பபாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.
அதில் பேசிய சீமான்,'' முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பாடல் பாடியது குறித்தும் , நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட காளியம்மாள் குறித்து பேசிய ஆடியோ விவகாரத்திற்கு காரணம் திருச்சி எஸ்.பி வருண் குமார் தான் என்று கூறி அவரை ஒருமையில் பேசியிருந்தார்.
அதுமட்டுமில்லாது நடிகை விஜயலட்சுமியை தனக்கு எதிராக தூண்டிவிட்டது திமுக என சீமான் பேசிய வார்த்தைகள் கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளன.
விஜயலட்சுமி
சீமானால் தான் கர்ப்பம் ஆகியதாகவும் ஆனால் இது வெளியே தெரியக்கூடாது என கரு சிதைவு செய்ததாக புகார் கூறியிருந்தார். இருந்த போதும் சீமானுக்கு எதிராக அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சமீபகாலமாக அமைதியாக இருந்து வந்த விஜயலட்சுமிதன்னை பற்றி சீமான் பேசியது தொடர்பாக மோசமான வார்த்தையால் விமர்சித்து மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எதற்காக என்னையும் திமுகவையும் இணைத்து பேசுறீங்க, திமுக, கலைஞர் மற்றும் என்னையே தவறாக பேசுவதை விட அரசியலில் வேறு எதுவும் உங்களுக்கு தெரியாதா.?
என்னைய பற்றி பேசாதே என சொல்லியும் நீ என்னைய பற்றி எதற்காக பேசுகிறார்.
நான் அமைதியாக பெங்களூரில் இருக்கேன். என்னைய பற்றியும் திமுகவை பற்றியும் தொடர்ந்து தவறாக பேசினால் 2026ஆம் ஆண்டும் தேர்தலில் தோல்வி தான் கிடைக்கும்.
இதோட நிப்பாட்டிக்கோ, கடைசியாக சொல்கிறேன்.
இதற்கு மேலும் என்னை பற்றி பேசினால் என்ன செய்வேன் என உனக்கு தெரியும் என மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி விஜயலட்சுமி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மீண்டும் சீமானுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.