கட்சியை கலைப்பாரா சீமான்? அங்கீகரிக்கப்பட்டும் தர்ம சங்கடத்தில் தம்பிகள்!
தன்னை விட பாஜக அதிக வாக்கு சதவீதத்தை வாங்கி விட்டால், கட்சியை கலைத்து விடுவதாக தேர்தலுக்கு முன்பாக நாம் தமிழர் சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல்
நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி 40/40 வென்று அசத்தியுள்ளது. எதிர்த்து களம் கண்ட பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன.
இந்த தேர்தலில் சின்னம் தொடர்பாக பல சிக்கலை சந்தித்த நாம் தமிழர் கட்சி, மைக் சின்னத்தில் இறுதியில் போட்டியிட்டது.
தர்ம சங்கடம்
தேர்தலுக்கு முன்பாக பேட்டியளித்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தனித்து தமிழகத்தில் தங்களை விட அதிக வாக்குகளை பெற்றால், தான் கட்சியை கலைத்து விட்டு செல்வதாக அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
வெளியாகயுள்ள தேர்தல் முடிவுகள் அவருக்கு சிக்கலை உண்டாகிவிட்டன. பாஜக தனித்து தமிழகத்தில் 11.24% வாக்குகளை பெற்றுள்ளது.
மறுமுனையில் நாம் தமிழர் கட்சி 8.21% வாக்குகளை பெற்றுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் உருமாறியிருக்கும் இருப்பதை கட்சி தொண்டர்கள் கொண்டாட தயாராகி வரும் நிலையில், சீமானின் கருத்துக்களை எதிர்க்கட்சிகள் ட்ரெண்ட்டாக்கி விட்டுள்ளனர்.