விவசாயி சின்னத்தை கைப்பற்றும் சீமான் - அங்கீகரிக்கப்படுகிறார்!! பெற்ற வாக்குகள் எவ்வளவு?
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி
தமிழக மாநில கட்சிகளில் வேகமாக வளரும் கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. இதற்கு முக்கிய காரணம் சீமான் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் தங்களது வாக்குவங்கியை வளர்த்து வரும் நா.த.க, இம்முறையும் தேர்தலை தனித்து போட்டியிட்டது.
அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த நா.த.க தேர்தலில் விவசாயி சின்னத்திற்காக கடுமையாக முயற்சி செய்து அதில் ஏமாற்றமடைந்து.
அங்கிகரிக்கப்பட்ட கட்சி
மைக் சின்னத்தில் குறுகிய இடைவெளியில் தங்களது சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்ற நா.த.க 40 தொகுதிகளையும் சேர்ந்து தற்போது வரை 35,17,567 வாக்குகள் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் படி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற ஒரு கட்சி மக்களவையில் 2 இடங்கள் அல்லது 8% இடங்களை வெல்ல வேண்டும்.
வாக்குகள் சதவீதத்தில் அதனை நிறைவேற்றியுள்ளது நாம் தமிழர். இது அக்கட்சி தொண்டர்களுக்கு கொண்டாடட்டமான ஒன்றே ஆகும்.