56 போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி !

M K Stalin Tamil nadu Tamil Nadu Police
By Vidhya Senthil Aug 09, 2024 04:53 AM GMT
Report

தமிழகம் முழுவதும் 56 போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் (2) என்.எஸ்.நிஷா, நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் .

 56 போலீஸ் எஸ்.பி.க்கள்

ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பிஹரிகிரன் பிரசாத், சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் . திருப்பத்தூர் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி எஸ்.பி.யாகவும், திருவண்ணாமலை எஸ்.பி.கார்த்திகேயன் கோவை எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

56 போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி ! | Transfer Of 56 Sps Across Tamil Nadu

திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் எஸ்.பி.யாகவும், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி புக்யா சினேக பிரியா, சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் . மேலும் சென்னை பூக்கடை காவல் மாவட்டதுணை ஆணையர் ஸ்ரேயா குப்தா,திருப்பத்தூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 தாம்பரம் காவல் மாவட்ட பள்ளிக்கரணை துணை ஆணையர் கவுதம்கோயல் சேலம் எஸ்.பி.யாகவும், அங்கிருந்த அருண் கபிலன் நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல் விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் எஸ்.பி.யாகவும், நீலகிரி எஸ்.பி. சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை துணை ஆணையராகவும், காவல் நவீனமயமாக்கல் உதவி ஐ.ஜி டி.கண்ணன், விருதுநகர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் .

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - வெளியான அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - வெளியான அதிரடி அறிவிப்பு!

 பணியிட மாற்றம் 

தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜி.சுப்புலட்சுமி கோயம்பேடு துணை ஆணையராக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு (1) துணை ஆணையர் ஜி.ஸ்டாலின்மயிலாடுதுறை எஸ்.பி.யாகவும், கரூர் எஸ்.பி. கே.பிரபாகர் திருவண்ணாமலை எஸ்.பி.யாகவும்,

56 போலீஸ் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி ! | Transfer Of 56 Sps Across Tamil Nadu

சென்னை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தருமபுரி எஸ்.பி.யாகவும், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் வி.ஆர்.னிவாசன் தென்காசி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் .

சேலம் தெற்கு துணை ஆணையர் என்.மதிவானன் வேலூர் எஸ்.பி.யாகவும், ஆவின் விஜிலென்ஸ் எஸ்.பி. மேகலினா, ஐடென் சென்னை தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப் பட்டுள்ளனர்.

மதுரை தெற்கு மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பிசுஜித் குமார் சென்னை பாதுகாப்பு பிரிவுக்கும், வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பி எஸ்.செல்வநாகரத்தினம் திருவல்லிக் கேணி காவல் மாவட்ட துணைஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.