விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 3 போலீசார் பணியிட மாற்றம்
விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 3 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
3 போலீசார் பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,
மணல் கொள்ளையர்களுடன் தொடர்புடைய ஏட்டு சரவணன், தனிப்பிரிவு போலீசார் மகாலிங்கம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.
ஏற்கனவே உதவி ஆய்வாளர் சுரேஷ் முறப்பநாடு மணல் கொள்ளை விவகாரத்தில் சாயர்புரத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலையில் முதல் குற்றவாளியான ராமசுப்புவுடன் கொலை செய்வதற்கு முன்பு தொலைபேசியில் உரையாடியதன் ஆதாரங்களைக் கொண்டு நீலகிரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்.