தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - வெளியான அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎஸ்
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம் . அந்த வகையில் இன்று தமிழக காவல் துறையில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த விவரம் வருமாறு:-
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
