ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாத சம்பளம் இதுதான் - விவரம் தெரியுமா?

India
By Sumathi Mar 28, 2024 07:38 AM GMT
Report

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அரசு வேலை 

இந்தியர்கள் அரசு வேலை பெறுவதை தங்களது இலக்காக கொண்டுள்ளனர். காரணம், நிரந்தர பணி, நிலையான ஊதியம், சலுகைகள் மற்றும் மரியாதை என எண்ணற்ற அம்சங்கள் அரசு பணியில் அடங்கியுள்ளன. அதிலும் அதிகமான ஊதியம் என்பதாலும்..

IAS - IPS

இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் பதிவிகள் மிக உயர்ந்த பதவிகள் என்று நாம் அறிந்தது தான். ஐஏஎஸ் அதிகாரிகள் முதலில் பணியில் சேரும்போது அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும்.

இஸ்ரோவின் சம்பளம் இதுதான் - கேட்டதும் வெளியேறிய ஐஐடி மாணவர்கள்!

இஸ்ரோவின் சம்பளம் இதுதான் - கேட்டதும் வெளியேறிய ஐஐடி மாணவர்கள்!

சம்பள விவரம்

மேலும், TA, DA மற்றும் HRA ஆண்டுதோறும் உயர்ந்துக்கொண்டே இருக்கும். ஒரு அமைச்சரின் செயலாளர் பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் அடிப்படை ஊதியம் சுமார் 2,50,000 வரை இருக்கும். மேலும் ஐஏஎஸ் அதிகாரியின் பதவிக்கு ஏற்ப தர ஊதியம் ரூ.5,400 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாத சம்பளம் இதுதான் - விவரம் தெரியுமா? | Ias And Ips Officer Monthly Salary

குறிப்பாக, வயது, அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப அதிகாரிகளின் ஊதியம் அதிகரிக்கப்படுகிறது. ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுத்தவரை, முதலில் பணியில் சேரும்போது அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும்.

மேலும் TA, DA மற்றும் HRA ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ.67,320 வழங்கப்படும். ஐஆர்எஸ் அதிகாரிகளின் தொடக்க கால சம்பளமாக ரூ.56,100 மற்றும் அதிகபட்சம் ரூ.2,25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.