இனி இவர்களுக்கு மட்டும் தான் லோயர் பெர்த் - ரயில்வே எடுத்த அதிரடி முடிவு!
டிக்கெட் புக்கிங் குறித்த முக்கிய தகவலை ரயில்வே வெளியிட்டுள்ளது.
லோயர் பெர்த்
இந்திய ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே தங்களுக்கான பெர்த்தையும் கேட்டுக்கோரும் முறை நடைமுறையில் உள்ளது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது.
முன்பு லோயர் பெர்த் கேட்கும் பெரும்பாலான நபர்களுக்கு அது வழங்கப்பட்டு விடும். ஆனால், இனி யாருக்கெல்லாம் லோயர் பெர்த் கிடைக்கும் என்று ரயில்வே புதிய விதிகளை வகுத்துள்ளது. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பெர்த்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
ரயில்வே அறிவிப்பு
இதன்படி, ஸ்லீப்பர் வகுப்பில் 4 இருக்கைகள் ஒதுக்கப்படும். மேலும், 2 டையர் மற்றும் 3 டையர் ஏசி பெட்டிகளில் தலா 2 இருக்கைகள் ஒதுக்கப்படும். அதில் மாற்றுத்திறனாளிகளும், அவர்களுடன் பயணிப்பவர்கள் அமரலாம்.
மூத்த குடிமக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில், ஸ்லீப்பர் வகுப்புகளில் 6 முதல் 7 லோயர் பெர்த்களும், 3 டையர் ஏசி பெட்டிகளில் 4 முதல் 5 லோயர் பெர்த்களும், 2 டையர் ஏசி பெட்டிகளில் 3 முதல் 4 லோயர் பெர்த்களும் ஒதுக்கீடு செய்யப்படும். கர்ப்பிணிகளுக்கும் லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒருவேளை மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மேல் பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தாலும், டிக்கெட் பரிசோதகரை அணுகி, லோயர் பெர்த் வாங்கிக் கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.