அயோத்தி ராமர் கோவில் செல்ல டிக்கெட் புக் பண்றீங்களா? இதோ அசத்தல் ஆஃபர்!
அயோத்தி ராமர் கோவில் செல்ல டிக்கெட் புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ராமர் கோவில்
பேடிஎம் நிறுவனம் ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவையை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, அங்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 100% கேஷ் பேக் சலுகையை அறிவித்துள்ளது.
இந்த கேஷ் பேக் சலுகையை பெறுவதற்கு “BUSAYODHYA” என்ற ப்ரோமோ கோடை பஸ் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களும் “FLYAYODHYA “ என்ற கோடை விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களும் பயன்படுத்தி 100% கேஷ் பேக்கை பெற முடியும்.
cashback
அதன்படி, ஒவ்வொரு 10வது யூசருக்கும் கேஷ் பேக் வழங்கப்படுகிறது. இதில், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் கேஷ்பேக்கும், ஃபிளைட் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கேஷ்பேக்கும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே புக் செய்த டிக்கெட்டுகளை எந்தவித அபராதமும் இன்றி இலவசமாக கேன்சல் செய்யும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவிலுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் பேடிஎம் வழியாகவே நன்கொடையை அளிக்கும் வசதியையும் அறிவித்துள்ளது.