பேடிஎம்-ன் சேவைக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி - எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா?

India Reserve Bank of India paytm
By Jiyath Feb 01, 2024 05:10 AM GMT
Report

பேடிஎம் பேமெண்ட் வங்கி, வாடிக்கையாளர்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கி 

இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் (Paytm)செயல்பட்டு வருகிறது.

பேடிஎம்-ன் சேவைக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி - எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா? | Rbi Bars Paytm Payments Bank

இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பேடிஎம் பேமெண்ட் வங்கி (Paytm Payment Bank) பிப்ரவரி 29 முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

ஓடும் ரயிலில் காலி சீட் இருக்கா? வீட்டில் இருந்தே பார்க்கலாம் - எப்படி தெரியுமா?

ஓடும் ரயிலில் காலி சீட் இருக்கா? வீட்டில் இருந்தே பார்க்கலாம் - எப்படி தெரியுமா?

தடை 

இதுகுறித்து ரிசர்வ் வாங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் "சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவில், சில விதிமுறைகளை பே-டிஎம் பேமெண்ட் வங்கி நிறைவு செய்யாதது கண்டறியப்பட்டது.

பேடிஎம்-ன் சேவைக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி - எப்போது அமலுக்கு வருகிறது தெரியுமா? | Rbi Bars Paytm Payments Bank

இதனையடுத்து, அந்த வங்கியிலுள்ள கணக்குகளில் வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு தொகை செலுத்துவதற்கும், இணைவழி பணப்பைகள், பாஸ்டாக், என்சிஎம்சி அட்டைகள் ஆகிவற்றில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கும் பிப்ரவரி 29 முதல் தடை விதிக்கப்படுகிறது.

எனினும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கணக்கில் உள்ள தொகையை வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் தொடர்ந்து எடுக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.