இப்போதைக்கு அயோத்தி கோவிலுக்கு செல்ல வேண்டாம் - பிரதமரின் திடீர் அறிவுறுத்தல்

Narendra Modi Ayodhya Ayodhya Ram Mandir
By Karthick Jan 25, 2024 05:35 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுக்கு அதிரடி அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

ராமர் கோவில்

அயோத்தியில் கடந்த 22-ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த நிலையில், மதியம் 12:29 முதல் 12:30 மணிக்குள் பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

modi-advices-not-to-visit-ayodhya-for-the-time

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்றோர் முன்னிலையில் இந்நிகழ்வை முடித்து வைத்தனர். திறப்பு நாளான முதல் நாள் மட்டுமே பக்தர்கள் சுமார் 3 லட்ச பேர், இக்கோவிலில் வழிபட்டதாக கூறப்படுகிறது.

திருப்பதிக்கே tough கொடுக்கும் அயோத்தி..! நாட்டின் செல்வாக்கு மிக்க கோவில்களை அறிவீர்களா..?

திருப்பதிக்கே tough கொடுக்கும் அயோத்தி..! நாட்டின் செல்வாக்கு மிக்க கோவில்களை அறிவீர்களா..?

பிரதமர் அறிவுரை

நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பெரும் திரளாக சென்று ராமர் கோவிலில் வழிபட்டு வருவதால், கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாமல், போலீசாரும் திணறி வருகின்றனர். இந்த சூழலை முன்னிட்டு, பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது.

modi-advices-not-to-visit-ayodhya-for-the-time

அதாவது மத்திய அமைச்சர்கள் வழிபாடு செய்ய கோவிலுக்கு சென்றால், அதற்காக தனியாக பாதுகாப்பபு எபிரேடுகள் செய்யவேண்டி வரும் என்ற காரணத்தால், சிறிது காலம் கோவிலுக்கு சென்று வழிபடுவதை தவிர்க்கும்மாறு அவர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.