திருப்பதிக்கே tough கொடுக்கும் அயோத்தி..! நாட்டின் செல்வாக்கு மிக்க கோவில்களை அறிவீர்களா..?
நேற்று அயோத்தி கோவில் திறக்கப்பட்டது முதல், நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற, அதிக வருமானம் ஈட்டும் கோவில்களை குறித்த செய்திகள் அதிகளவில் பேசப்படுகின்றன.
இந்த தொகுப்பில் நாட்டின் செல்வாக்கு மிக்க 5 கோவில்களை குறித்து காணலாம்.
பஞ்சாப் பொற்கோவில்
இந்த பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பது பஞ்சாப் மாநில அமிர்தசரஸ் பகுதியில் அமைந்துள்ள பொற்கோவில். இந்திய வரலாற்றில் அரசியல், ஆன்மீகம் என்று இரண்டிலும் பெரும் இடத்தை பிடித்துள்ள பஞ்சாப் பொற்கோவில் நாட்டின் செல்வாக்கு மிக்க கோயிலாகவும் இருந்து வருகிறது.
இந்த கோவிலில், 400 கிலோ தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் ஆண்டு வருவாய் ரூ.500 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.
கேரளா குருவாயூர் கோவில்
4-ஆம் இடத்தில் கேரளா குருவாயூர் கோவில் பிடித்துள்ளது. கிருஷ்ணா அவதாரத்தில் பிறப்பதற்கு முன்பு பெருமாள், இக்கோவிலில் இருக்கும் வடிவில் தான் பெற்றோர் தேவகி மற்றும் வாசுதேவன் ஆகியோருக்கு காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக பெரிய சுற்றுலா ஈர்ப்பாக அமைந்துள்ள இந்த கோவிலின் வங்கி வைப்பு நிதி மட்டும் ரூ.1737.04 கோடியாகும்.
ஜம்மு வைஷ்ணவி தேவி கோவில்
3-வது இடத்தில், ஜம்முவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் சுற்றுலா மேற்கொள்பவர்கள் தவறாமல் சென்று வரும் இடமாகவும் இக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் சொத்து மதிப்பு ரூ. .2000 கோடி ரொக்கமாக கணிக்கப்படுகிறது. மேலும், கோவிலுக்கு சொந்தமாக 1800 கிலோ தங்கம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்
2-வது இடத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் தக்கவைத்து கொண்டுள்ளது. கேரளா மாநிலத்தின் முக்கிய சுற்றலா ஈர்ப்பாக இந்த கோவிலும் இருக்கின்றது.இக்கோவிலின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட சுமார் ரூ.1.20 லட்சம் கோடியாக மதிப்பீட்டுள்ளது. நாட்டின் மிக முக்கிய செல்வாக்கான கோவிலாக பல ஆண்டுகளாக கலாச்சரம் மற்றும் ஆன்மீக மையமாக இந்த கோவில் திகழ்கிறது.
திருப்பதி ஏழுமலையான்
முதல் இடத்தில் இருக்கும் கோவில் குறித்து அனைவரும் அறிந்ததே. திருப்பதி கோவிலே. இந்தியா நாடு மட்டுமின்றி வருடம்தோறும் இக்கோவிலுக்கு மதத்தை தாண்டி பல நாட்டு மக்களும் தொடர்ந்து வந்து வழிபாடு மேற்கொண்டு செல்கின்றனர்.
இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.3 லட்ச கோடி ரூபாய் என அண்மையில் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், நாட்டிலேயே மிக செல்வாக்கான கோவில் இது தான்.
நேற்று திறக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில், இந்த பிரசித்தி பெற்ற செல்வாக்கு மிக்க கோவில்களுக்கு பெரும் போட்டியாக அமையும் என்றே தற்போது பலரும் பேசத்துவங்கிவிட்டனர்.