நொடியில் டிக்கெட்; தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணும்போது.. இதை அவசியம் மறக்காதீங்க!

Indian Railways
By Sumathi Jun 17, 2024 04:51 AM GMT
Report

தட்கல் முறையில் டிக்கெட் புக் செய்யவதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

தட்கல் டிக்கெட்

ரயில் பயணத்தேதிக்கு ஒரு நாள் முன்பு தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். AC பெட்டிகளுக்கு காலை 10 மணிக்கும், AC அல்லாத பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு ஆரம்பமாகிறது.

irctc

நேரடியாகவே ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கவுண்டரிலும் தட்கல் முன்பதிவு செய்யலாம். பெரும்பாலும், செல்போன் அல்லது லேப்டாப்பிலேயே தட்கலில் புக் செய்கிறார்கள். IRCTC வெப்சைட் அல்லது ஆப் மூலமும் புக்கிங் செய்யலாம்.

முன்பதிவு இல்லாமலேயே.. இனி வீட்டிலேயே ரயில் டிக்கெட் எடுக்கலாம் - விவரம்!

முன்பதிவு இல்லாமலேயே.. இனி வீட்டிலேயே ரயில் டிக்கெட் எடுக்கலாம் - விவரம்!


பிரிமியம் தட்கல்

தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டுமானால், தட்கல் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே, Log In செய்து தயாராக இருப்பது நல்லது. டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, குறைந்த பெர்த்களை தேர்வுசெய்யலாம். அவை பொதுவாக மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன.

நொடியில் டிக்கெட்; தட்கல் ரயில் டிக்கெட் புக் பண்ணும்போது.. இதை அவசியம் மறக்காதீங்க! | Book Tatkal Confirm Ticket In Train Tips

கன்பார்ம் டிக்கெட்டை பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். லோயர் பெர்த்தில் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு சற்று அதிகம் உள்ளது. ஒரே நேரத்தில் 4 தட்கல் வரை ரயில்வே கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

IRCTC தளத்தில் ஒரு கணக்கை பயன்படுத்தி 2 டிக்கெட்டுகள் மட்டுமே செய்ய முடியும். இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டியுள்ளது. என்னவென்றால், தட்கலில் டிக்கெட் கிடைக்காதபோது, இந்த பிரிமியம் தட்கல் முறையில் டிக்கெட்டை முயற்சிக்கலாம்.