ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது - டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

Indian Railways
By Thahir Jul 25, 2023 07:14 AM GMT
Report

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கப்பட்டுள்ள நிலையில், அமேசான், மேக்மை டிரிப் உள்ளிட்ட செயலிகளில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

முடங்கியது ஐஆர்சிடிசி இணையதளம் 

ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதில் ஐஆர்சிடிசி இணையதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இணைய தளத்தில் ரயில் டிக்கெட், விமான டிக்கெட் போன்றவை புக் செய்யலாம்.

IRCTC website is down

இந்தநிலையில் இன்று காலை 10 மணிக்கு ஏசி ரயிலில் பயணிப்பதற்கான தட்கல் முன் பதிவு தொடங்கிய நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் திடீர் என செயல்படாமல் முடங்கியது.

இதன் காரணமாக அவசரமாக வெளியூர் செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் ரயில் பயணிகள் தவிக்கும் நிலை உருவானது.

ஐஆர்சிடிசி நிர்வாகம் விளக்கம் 

இதனையடுத்து ஐஆர்சிடிசி இணையதளம் உடனடியாக சீர் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன்காரணமாக 11 மணிக்கு இரண்டாம் வகுப்பு பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இணையதளத்தை நம்பாமல் ரயில் நிலையங்களுக்கு சென்று முன்பதிவு செல்ல முயன்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடக்கம் நிகழ்ந்துள்ளது.

பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற விருப்பத்தை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அமேசான், மேக் மை டிரிப் ஆகிய செயலிகளும் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐஆர்சிடிசி இணையதளம் தெரிவித்துள்ளது.